கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
Colombo
Sri Lanka
Economy of Sri Lanka
By Laksi
கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI)123.50 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு இன்று (04.10.2024) பதிவாகியுள்ளது.
வளர்ச்சி அதிகரிப்பு
இந்த நிலையில், இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 12,053.49 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அத்துடன், மொத்த புரள்வு 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2024 ஜூலை 3ஆம் திகதிக்கு பிறகு அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 12,000ஐ கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |