வவுனியாவில் மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல்

Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Crime Sri Lankan Schools
By Fathima May 30, 2023 10:20 AM GMT
Fathima

Fathima

வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

படுகாயமடைந்த 18 வயதான மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (29.05.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினமாக நேற்றைய தினம் மாலை குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொழுகையினை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

வவுனியாவில் மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல் | Group Attack School Student

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது அங்கு வந்த மற்றொரு இளைஞர் குறித்த மாணவன் மீது இரும்பு மற்றும் பொல்லுகளால் சரமாரியாகத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.