இலங்கை அரச வேலைவாய்ப்பில் இணைந்து கொள்ளும் பட்டதாரிகள்!
இலங்கையின் அரசத் துறையில் 35,000 பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர (Eranga Gunasekara) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்...
மேலும், இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் பல்வேறு இடங்களிலும் தொழில் கோரும் பட்டதாரிகள், தமது தொழில்களை கோரி, போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும், இவர்கள் எந்த தொழில்களின் நிமித்தம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தகவலை அமைச்சர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |