நாடு முழுவதும் அரசாங்கத்தால் திறக்கப்படவுள்ள மலிவு விலை உணவகங்கள்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Mar 28, 2025 11:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் உணவுகளை வழங்கும் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்புச்சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

டொலர் பெறுமதியில் பதிவான மாற்றம்!

டொலர் பெறுமதியில் பதிவான மாற்றம்!

மாதிரி உணவகம்

அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் முதலாம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது.

இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் அரசாங்கத்தால் திறக்கப்படவுள்ள மலிவு விலை உணவகங்கள் | Govt To Open Affordable Restaurants Islandwide

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுகளின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.  

ரமழான் பெருநாள் கொண்டாட்டத்திற்காக தென்கிழக்கு பல்கலைக்கழக சங்கத்தால் வழங்கப்பட்ட பொதி

ரமழான் பெருநாள் கொண்டாட்டத்திற்காக தென்கிழக்கு பல்கலைக்கழக சங்கத்தால் வழங்கப்பட்ட பொதி

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW