நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் தொடர்பில் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள கோரிக்கை
சவுதி அன்பளிப்பு செய்த நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் விடயத்தில் அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்காது பாராமுகமாக செயற்படுகிறது என திருகோணமலை மாவட்ட ஐ.ம.ச நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் குற்றம்சுமத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று, நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் நீண்ட காலமாக பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள சவுதி அரேபிய தூதுவராலயத்தின் ஊடாக அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்று வரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை.
பயனாளிகளின் பாவனைக்கு இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்படாமையினால்
வீட்டுத்திட்டம் பற்றைக்காடாக மாறியுள்ளது என இம்ரான் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.