அரசு கூடுதல் கவனம்:MOP உரத்தின் விலையை குறைக்க நடவடிக்கை!

Agriculture Water And Action For Rural Development Sri Lanka
By Nafeel Apr 20, 2023 08:59 AM GMT
Nafeel

Nafeel

இந்த ஆண்டில் நெற்செய்கைக்கான MOP உரத்தின் விலையை 4500 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது சந்தையில் MOP உரத்தின் 50 கிலோகிராம் மூடை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் அந்தத் தொகையை விவசாயிகளுக்கு ஏற்க சிரமமாக இருப்பதால் விலையைக் குறைக்கத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி,அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

குறைந்த விலையில் உரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் செயற்பட்டு வருவதால், இரசாயன உர விற்பனை தொடர்பில் சந்தையில் போட்டி உருவாகியுள்ளதோடு, இதன் மூலம் விவசாயிகள் பயனடைவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, யூரியா உரத்தின் விலை குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் TSP மற்றும் MOP ஆகிய உரங்களின் விலை மேலும் குறையும் என தனியார் துறை உர விற்பனையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.