வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்

Sri Lankan Peoples GMOA Sri Lanka Strike Sri Lanka Doctors
By Rakshana MA Aug 06, 2025 04:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

வைத்தியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதித காலை 8.00 மணிக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இடமாற்றப் பட்டியல் பிரச்சினைகளில் சுகாதார அமைச்சு முறையாகத் தலையிடவில்லை என்றால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவாக, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

மட்டக்களப்பிலுள்ள மக்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பிலுள்ள மக்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

வைத்தியர்கள் கோரிக்கை 

சுகாதார அமைச்சுக்கு நாங்கள் ஒரு காலக்கெடுவை வழங்கியுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்.

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள் | Govt Doctors Threaten Islandwide Strike

ஆனால் இந்த அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். ஏதேனும் காரணத்தால் 11 ஆம் திகதி காலை 8.00 மணிக்குள் இது தொடர்பாக சுகாதார அமைச்சு நேர்மறையான தலையீட்டைச் செய்யத் தயாராக இல்லை என்றால், அதன்படி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம்

ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம்

மட்டக்களப்பில் யானை தாக்கி இளம் தாய் பலி : உயிர் தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பில் யானை தாக்கி இளம் தாய் பலி : உயிர் தப்பிய 3 வயது குழந்தை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW