மட்டக்களப்பில் யானை தாக்கி இளம் தாய் பலி : உயிர் தப்பிய 3 வயது குழந்தை

Batticaloa Elephant
By Rakshana MA Aug 05, 2025 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு (Batticaloa) ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முத்து நகரில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் மக்கள்

முத்து நகரில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் மக்கள்

யானை தாக்குதல் 

மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன் பசுபதி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் யானை தாக்கி இளம் தாய் பலி : உயிர் தப்பிய 3 வயது குழந்தை | Elephant Attack Kills Mother In Sl

சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில் வீட்டின் முற்றத்தில் தனது 3 வயது பெண் குழந்தையுடன் இருந்த நிலையில் குடிமனைக்குள் உட்புகுந்த யானை அவர்கள் மீது தாக்கியதில் தாயார் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுளது.

இதனையடுத்து உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

காத்தான்குடி படுகொலையின் உண்மைகள் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம்

காத்தான்குடி படுகொலையின் உண்மைகள் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம்

இலங்கையிலுள்ள புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW