இலங்கையின் நீதித்துறை அமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம்

Law and Order Court of Appeal of Sri Lanka
By Fathima Dec 16, 2025 03:32 PM GMT
Fathima

Fathima

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான 'இ-நீதிமன்றம்' (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறை

இந்த டிஜிட்டல் உருமாற்ற செயல்பாட்டின் ஆரம்ப கட்டமாக, தற்போது உயர் நீதிமன்றம் அதன் வழக்கு நிர்வாகத்திற்காக ஒரு இணையதளம் மற்றும் தொடர்புடைய மின்னணு முறைமையை (e-CMS) அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இலங்கையின் நீதித்துறை அமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம் | Govt Allocate Implement For E Court

உயர் நீதிமன்றத்திற்காக உருவாக்கப்பட்ட  இணையதளம் மற்றும் e-CMS முறைமையை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, நீதிபதிகள் நிறுவனம் உட்பட நாடு முழுவதும் பரவியுள்ள அனைத்து நீதி நிறுவனங்களுக்கும் மாற்றியமைத்து பயன்படுத்துவதே இ-நீதிமன்ற திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் மூலம் தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பை ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம், நாட்டில் நீண்ட காலமாக நீதித்துறை எதிர்கொள்ளும் வழக்கு தாமதங்கள், தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் நீதிக்கு காலந்தவறிய அணுகல் மற்றும் நடைமுறைச் செயல்திறன் இன்மை போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், நீதித்துறை சேவை ஆணையத்திற்கு ரூ. 150 மில்லியன் நிதியை வழங்குவதற்காக சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.