கிழக்கு மாகாண ஆளுநர் அரச அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை(Photos)
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lankan Peoples
Senthil Thondaman
Economy of Sri Lanka
By Badurdeen Siyana
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ,திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருடன் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அதிகமாக சுரங்கம் மற்றும் மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை
எனவே தற்போது காணப்படும் பொறிமுறை குறித்து விளக்கம் அளிக்குமாறும், சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் அகழ்வுகள் தொடர்ந்தும் நிலவி வருவதால் அது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறும் அரச அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.




