வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Jaffna Sri Lanka Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Fathima May 22, 2023 06:27 AM GMT
Fathima

Fathima

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிகழ்வு இன்றைய தினம் (22.05.2023) காலை 9.20 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கடமைகளைப் பொறுப்பேற்ற ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார் | Governor Of Northern Province

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 17ஆம் திகதி, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery