அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்
Government Employee
Sri Lanka
Sri Lanka Government
Election
By Fathima
இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச பணியாளர்களுக்கு, மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதன்படி, அரச பணியாளர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (08.05.2023) வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |