ஜனாஸா எரிப்பு விவகாரம்: அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை
கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கூறியே ஆக வேண்டும் என இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் இந்த தகவலை மறைக்க நினைக்கவில்லை எனவும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி பதில் அளிப்போம் என சுகாதார அமைச்சர் வழங்கிய பதிலில் எமக்குத் திருப்தி இல்லை.
ஆலிம் பரீட்சை
மக்களால் தெரிவானவர்கள் என்ற உரிமையுடனேயே இந்த விடயத்தைக் கோருகின்றோம். எமது மதத்தை நிந்தித்த கோத்தாவுக்கு இறைவன் வழங்கிய தண்டனையாகவே அவரது ஆட்சிக் கவிழ்ப்பை நோக்குகின்றோம்.
இதுவே எமது நம்பிக்கை. எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றன. எனவே, சிறுபான்மைச் சமூகங்களை சிறுமைப்படுத்தும் இழி செயலைச் செய்ய வேண்டாம்.
அல் ஆலிம் பரீட்சையை தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் விரைவாக நடத்தி, சிறந்த மௌலவிமார்களை ஆசிரியர்களாக நியமியுங்கள் என்றார்.
கோரிக்கை
இதேவேளை, கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்தமை தொடர்பில் அறிக்கை தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்குமாறு சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் சஜித் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |