விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

Government Employee Sri Lanka
By Mayuri Sep 09, 2024 01:57 AM GMT
Mayuri

Mayuri

வெளிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரிய தினத்தில் கடமைக்கு சமூகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு செயலாளரின் கையொப்பத்துடன் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டுமென அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய தினத்தில் கடமைக்கு சமூகமளிப்பது கட்டாயம்

விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுமுறையில் வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | Government Staffs In Sri Lanka Gov Employee

அரச ஊழியர்களின் வெளிநாட்டு விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை மீறும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW