ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வூதிய திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன இதனைக் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “700,000க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற சமூகத்தைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் அறிவோம்.
சலுகைகளை வழங்க நடவடிக்கை
நாங்கள் ஓய்வுபெற்ற அமைப்புகளைச் சந்திக்கிறோம். பிரதி அமைச்சர், செயலாளர், பணிப்பாளர் நாயகத்தைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறோம்.
நாங்கள் இன்னும் அடையாளம் காண முடியாத பிரச்சினைகள் இருக்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற எதிர்பார்க்கிறது." எனவும் தெரிவித்தார்.
மேலும், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாத ஏராளமான ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் இருப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |