அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்; அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மாகாண சபைத் தேர்தல் மற்றும் தேர்தலின் எல்லை நிர்ணயம் தொடர்பில் விஜித ஹேரத்திடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளி்க்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
எல்லை நிர்ணயம்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “ மாகாண சபைத் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டில் நிச்சயமாக நடத்தப்படும்.
பழைய முறைமையிலா அல்லது புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்படுமா என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும். எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடாளுமன்றம் தீரமானிக்கும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |