சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் அதிரடியாக ரத்து

Government Employee Sri Lanka Ministry of Health Sri Lanka
By Raghav Aug 20, 2025 04:37 AM GMT
Raghav

Raghav

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது. 

அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளுக்கான அனுமதியை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

சுகாதார அமைச்சு

அதேநேரம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் காணப்படும் அனைத்து பதவிகளுக்குமான வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான புதிய ஆட்சேர்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் அதிரடியாக ரத்து | Government Servants Holidays Cancelled

எவ்வாறாயினும் இந்த புதிய சுற்றறிக்கை தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிக்கு இலங்கை இலவச சுகாதார சேவை சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், வெளிநாட்டு விடுமுறைகளைப் பெறுவதற்கு நிறுவனக் குறியீட்டில் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள், சுகாதார அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இல்லாது போவதாக சுட்டிக்காட்டியுள்ளது. 

சுகாதார ஊழியர்கள்

அதேநேரம், பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட உள்ளூர் விடுமுறை உரிமையும் அதன்மூலம் ரத்தாவதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ​ரோய் டி மெல் தெரிவித்துள்ளார். 

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் அதிரடியாக ரத்து | Government Servants Holidays Cancelled

வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து, அதற்கான பயிற்சி மற்றும் விசாக்கள் போன்றவற்றைப் பெற்றுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த புதிய சுற்றறிக்கையால் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே, சுகாதார அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட இந்த முடிவை வலுவற்றதாக்கி, அந்த சுற்றறிக்கை ரத்து செய்வதற்கான உரிய வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.