அரச ஊழியர்களே… நாளை முதல் கைவிரல் அடையாளம் கட்டாயம்
Colombo
Sri Lanka
By Nafeel
**பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை
நாளை (15) திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிப்பது மற்றும் வெளியேறிச் செல்லும் போது கைவிரல் அடையாளம் கட்டாயம் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவையை வழமை போன்று கொண்டு நடாத்துதல் தொடர்பில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.டீ.என். ரஞ்சித் அசோகவினால் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.