நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Government Of Sri Lanka
By Rukshy Aug 12, 2024 03:32 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பெரும்பான்மையை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என கருத்துக்கள் வெளியாகின்ற நிலையில், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. 

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பெரும்பான்மை குறித்த குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Regarding Dissolution Parliament

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இறுதியாக இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாளிக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதேவேளை ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்புரிமை இன்மையால், ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் அதிகரித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை

இந்நிலையில் குறித்த அறிவிப்பின் பிரகாரம் ஆரம்பத்தில் 134 என்ற பெரும்பான்மையை கொண்டிருந்த ஆளும் கட்சிக்கு தற்போது 113 என்ற பெரும்பான்மை கூட இல்லை என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Regarding Dissolution Parliament

இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யார் வசம் உள்ளது என்பதில் குழப்ப நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இத்தகைய நெருக்கடியில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அரசாங்கம் அதனை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW