பல கோடி ரூபா வாடகை செலுத்த தவறிய அரசியல்வாதிகள் : வெளியாகியுள்ள தகவல்

Parliament of Sri Lanka Government Employee Money
By DiasA Jun 26, 2024 09:45 AM GMT
DiasA

DiasA

அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் 56 பேர் தங்களுடைய தங்குமிடங்களுக்காக பல கோடி ரூபாவுக்கும் மேலான வாடகையை செலுத்த தவறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, அவற்றில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 14 இலட்சம் ரூபாவுக்கான 19 நிலுவைகள் உள்ளன.

கட்டட வாடகை

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை 35 வீடுகளில் இருந்து சுமார் 23 இலட்சம் ரூபா வசூலிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல கோடி ரூபா வாடகை செலுத்த தவறிய அரசியல்வாதிகள் : வெளியாகியுள்ள தகவல் | Government Officers Failed To Pay Rent

இந்நிலையில் 32 நிறுவனங்களிடமிருந்து கட்டட வாடகையாக 33 கோடி ரூபாக்கு மேல் அமைச்சுக்கு செலுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜய வடனா கிராம வீடுகளில் வசித்த 18 அரச அதிகாரிகளிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபா வசூலிக்கப்படவில்லை.

இதேவேளை, சுமார் 32 நிறுவனங்களிடமிருந்து கட்டட வாடகையாக 33 கோடிக்கு மேல் குறித்த அமைச்சுகளுக்கு செலுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW