அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள விசேட தீர்மானம்!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.
போராட்டம்
இதற்கமைய நவம்பர், முதல் வாரத்திலிருந்து தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்மொழியப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகளின் போதிய பதிலைக் கொடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விஐபி சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் நோயாளர்காவுகை வண்டி சேவை மற்றும் மருத்துவமனைக் கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் மருத்துவ முகாம் உட்பட தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.