அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது! இம்ரான் எம்.பி

Sri Lanka Politician Sri Lankan political crisis Imran Maharoof
By Fathima Dec 22, 2025 12:41 PM GMT

இந்த அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது ஆபத்தானது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (22)கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, திருகோணமலை மாவட்ட கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான உப குழு கூட்டம் திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் ஆளுங்கட்சியின் ரொஷான் அக்மீமன எம்.பியால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அழைப்பு இல்லை

மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கோ குகதாசன் எம். பிக்கோ இந்த கூட்டத்திற்கு அழைப்பு இல்லை. மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்க்கட்சியின் வசம் இருப்பதால் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்களுக்கும் அழைப்பு இல்லை. தனியொரு எம். பி யால் அதிகாரிகளை வைத்து இந்த கூட்டம் நடைபெறுகின்றது.

அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது! இம்ரான் எம்.பி | Government Heading Towards Dictatorship Imran Mp

இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து சொல்வதற்கான வாய்ப்பை இந்த அரசாங்கம் முடக்கியுள்ளது. இதன் மூலம் இந்த அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது தெளிவாகின்றது. இது ஆபத்தான விடயமாகும்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.