இன்று முதல் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!

Government Employee Government Of Sri Lanka Climate Change Weather
By Fathima Nov 28, 2025 05:44 AM GMT
Fathima

Fathima

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று (28.11.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் 

அதன்படி, அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நாளை விசேட விடுமுறை அளிக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அரச ஊழியர்களுக்கு விடுமுறை! | Government Employees To A Holiday Tomorrow

அத்தோடு, தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இடையூறுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்புப் பிரிவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வழமை போல் தொடர்ந்து செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.