அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

Ranil Wickremesinghe
By Mayuri Aug 18, 2024 02:50 AM GMT
Mayuri

Mayuri

அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அடுத்த வருடம் 25,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் எதிர்காலம்

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் எதிர்காலம் கருதியே அனைத்து கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளோம்.

அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி | Government Employees Salary Will Be Increased

சிலிண்டர் விலை 6,000 ரூபாய் வரை உயரும் போது சஜித், அனுர போன்றவர்கள் எங்கே இருந்தனர் என்று கூற வேண்டும்.

அதற்கான பதிலை அவர்கள் வழங்கவில்லையாயின் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொருத்தமற்றவர்களாவர்.

வாழ்க்கை செலவு கொடுப்பனவு

இந்த நாட்டின் பொருளாதாரத்தை சஜித்தோ அனுரவோ மீள கட்டியெழுப்பவில்லை.

அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி | Government Employees Salary Will Be Increased

அடுத்த வருடத்தில் அரச பணியாளர்களுக்கான வாழ்க்கை செலவு கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பதுடன், அவர்களுக்கான அடிப்படை வேதனம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW