அரச ஊழியர்களின் ஊக்குவிப்பு தொகை: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை
கடந்த 2022 ஆம் நிதியாண்டில் குறிப்பிட்ட நிறுவனம் ஒன்று, இலாபம் ஈட்டியிருந்தால் மற்றும் குறைந்தபட்சம் 30 வீத வரிக்கு பிந்தைய இலாபத்தை, ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தியிருந்தால் மட்டுமே 2023 ஆம் ஆண்டிற்காக ஊக்குவிப்பு தொகை அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் நிதியாண்டில் சில நிறுவனங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. எனினும் வரிக்குப் பிந்தைய இலாபத்தில் குறைந்தபட்சம் 30 வீதத்தை ஒருங்கிணைந்த நிதிக்கு ஈவுத்தொகையாகச் செலுத்தவில்லை.
[LLRYB9S ]
ஊக்குவிப்பு தொகை
குறித்த நிறுவனங்களுக்கு இலாபத்தின் அடிப்படையில் போனஸ் என்று ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவில்லை என்று செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |