அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Government Employee Government Of Sri Lanka Sri Lanka Government
By Dhayani Mar 02, 2024 02:29 AM GMT
Dhayani

Dhayani

அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் ஏப்ரல் மாதம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வில்கமுவ பிரதேச செயலகத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க உழைத்தேன். இன்னொரு சம்பள உயர்வு பத்து வருடங்களில் செய்யப்பட வேண்டும். ஆனால் பொருளாதார அழுத்தம் காரணமாக 2024 இல் அதை செய்ய முடிவு செய்தோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்

சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Government Employee Salary Increase

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கை

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச ஊழியர்களின் சம்பளம் இவ்வருடம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு | Government Employee Salary Increase

இதேவேளை, அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 லட்சமாக உயர்த்த எதிர்ப்பார்த்துள்ளோம்.

அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பிரதேச செயலகங்களுக்கு அதிகளவான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை