தரமற்ற மருந்துகள் குறித்து அரசாங்கம் அளித்துள்ள விளக்கம்

Hospitals in Sri Lanka Medicines Nalinda Jayatissa
By Laksi Dec 07, 2024 05:12 AM GMT
Laksi

Laksi

 அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் தரமற்ற மருந்துகள் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், " தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள்தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

தரமற்ற மருந்துகள்

 குறித்த அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

தரமற்ற மருந்துகள் குறித்து அரசாங்கம் அளித்துள்ள விளக்கம் | Government Briefing On Substandard Medicines

ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌லக‌ விவகாரம்: முபாற‌க் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌லக‌ விவகாரம்: முபாற‌க் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் புதிய சட்டம்: வெளியான அறிவிப்பு

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் புதிய சட்டம்: வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW