தேங்காய் ஏற்றுமதி செய்யும் ஆளுநர்
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
Coconut price
By Benat
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பதவி வகிக்கும் ஆளுநர் ஒருவர் தேங்காய் ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேங்காய் ஏற்றுமதி செய்வதனை நிறுத்தினால் நாட்டில் தேங்காய் பற்றாக்குறையை வரையறுக்க முடியும் என தேசிய நுகர்வோர் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
மோசடி
குறுகிய காலத்திற்கு தேங்காய் ஏற்றுமதியை நிறுத்தினால் தேங்காய் பாற்றாக்குறையை தவிர்க்கலாம் என முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
முட்டை இறக்குமதியினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி போன்றதொரு நிலை தேங்காய் ஊடாகவும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.