அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
NPP Government
By Faarika Faizal
இலங்கையில் அரச ஊழியர்கள் சேவை என்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றில் முன்வைத்து அவர் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே 3 கட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச துறையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்நிலையில், அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன." என்றும் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |