மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள்

Batticaloa Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 19, 2024 03:31 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையில் ஆகக் குறைந்த அதாவது இரண்டு பேர் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையமாகும். 

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

தேர்தல் கடமை

வாக்களிப்பதற்கான வாக்குப்பட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 7:00 மணி முதல் மட்டக்களப்பு தேர்தல் மத்திய நிலையமாக விளங்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரிகளில் இருந்து விநியோகிக்கப்படும்.

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் | Goverment Officers Election Duties In Batticaloa

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளனர்.

இதுவரையிலும் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்கு சென்று வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

காரியாலயங்கள் 

தேர்தல் பிணக்குகளை தீர்க்கும் நிலையத்திற்கு இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இம் மாவட்டத்தில் இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் காரியாலயங்களிலும் இணைப்புக் காரியாலயங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயற்படும்.

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் | Goverment Officers Election Duties In Batticaloa

அதேபோன்று தபால் மூல வாக்கெண்ணும் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வருகை தருவதுடன், ஏனைய வாக்கெண்ணும் உத்தியோகத்தர்கள் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு தேர்தல் மத்திய நிலையமாக காணப்படும் மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW