சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல விவகாரம்: அஷ்ரப் முன்வைத்துள்ள கோரிக்கை

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Sammanthurai
By Rakshana MA Dec 24, 2024 01:33 PM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றை நிறுவுதல், மற்றும் பேருந்து நிலையம் ஒன்றை சம்மாந்துறையில் நிறுவுதல் போன்ற விடயங்கள் நடைமுறைப்படத்தப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால்(Ashraff Thahir) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.ஆதம்பாவா(A.Aatham Bawa) தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(24) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

மேலும், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம், ஜமாலியா பாடசாலை மாற்று காணி விடயம், மாவடிப்பள்ளியில் உடனடியாக பாலம் அமைப்பது சம்பந்தமான தீர்மானம், விவசாய காணி சம்பந்தமான பிரச்சினைகள், நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கான தீர்வுகள், போன்றவை கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.

சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல விவகாரம்: அஷ்ரப் முன்வைத்துள்ள கோரிக்கை | Gov Osusala And Bus Depot At Sammanthurai

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா வின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் அஷ்ரப் தாஹிர், ஏ.எம்.மஞ்சுல ரத்நாயக்க, எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடீஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி எம் நிசாம் காரியப்பர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், பிரதம கணக்காளர், ஏ.எல் மஹ்ரூப், உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத் துறையினரின் அதிரடி நடவடிக்கை

சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத் துறையினரின் அதிரடி நடவடிக்கை

நாட்டில் தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

நாட்டில் தேங்காயின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery