புதிய அரசாங்கத்தினூடாக கிடைத்துள்ள வாய்ப்பு : நழீம் எம்.பி

Sri Lanka Politician Eastern Province
By Rakshana MA Feb 12, 2025 03:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் தற்போது இன மத பேதமில்லாமல் சேவையாற்ற கூடிய ஒரு சந்தர்ப்பம் புதிய அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.நழீம்(Naleem) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று(11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அஸ்வெசும திட்டத்தில் அதிகம் உள்வாங்க வேண்டும். 

இஸ்ரேலின் விதிமீறல் : காஸாவில் போர் நிறுத்தம் கேள்விக்குறி?

இஸ்ரேலின் விதிமீறல் : காஸாவில் போர் நிறுத்தம் கேள்விக்குறி?

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்

மேலும், புதிய அரசாங்கம் கொண்டு வருகின்ற அனைத்து திட்டங்களும் வெற்றி பெற அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அத்துடன், கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வஸ்ம கொடுப்பனவு திட்டத்தில் சில குறைபாடுகள் நிறைந்தே காணப்பட்டன

சரியான தரவுகள் மூலம் பயனாளிகள் தெரிவு செய்யப்படாத காரணத்தால் அரச ஊழியர்கள் இன்றும் பொது மக்களினால் குறை கூறப்படுவது இடம்பெறுகின்றது.இது தவிர்க்கப்பட்டு,  இத்திட்டமானது எதிர்வரும் காலங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வந்தால் மட்டுமே இது நிலைபெறான திட்டமாக அமையும்.

புதிய அரசாங்கத்தினூடாக கிடைத்துள்ள வாய்ப்பு : நழீம் எம்.பி | Gov Create Without Racial Religious Discrimination

அத்துடன், இத்திட்டத்தின் ஊடாக கொண்டு வரப்படும் உற்பத்தி பொருட்களுக்குரிய முறையான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இத்துறை சார்ந்த நிபுணர்களின் அறிவுரையை பெற்று இதனை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நிலையில், இத்திட்டத்தில் வடக்கு கிழக்கிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை  அதிகம் உள்வாங்க வேண்டும் என்பதோடு, கடந்த காலங்களைப் போல் அல்லாமல் தற்போது இன,மத,பேதமில்லாமல் சேவையாற்ற கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற அனைத்து வேலை திட்டங்களுக்கும் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அரசாங்கம் கொண்டு வருகின்ற அனைத்து திட்டங்களும் வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் இந்த நாடு அபிவிருத்தி அடையும் என உறுப்பினர் நழீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

காசா மீது மீண்டும் போர்! டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW