உத்தியோகபூர்வ அரச வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரச வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த வீடு கோட்டாபய ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வீடு, பாதுகாப்பு படைத்தளபதி மற்றும் விமானப்படை தளபதியின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த வீட்டை விடுவிப்பதற்கு அரசாங்கத்தின் தலைவர்கள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் பேச வேண்டியிருந்தது.ஏனெனில், இந்த வீடு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்
கோட்டாபய ராஜபக்ச புதிய பங்களாவுக்கு செல்வதற்கு கூறிய காரணம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று மீண்டும் கோட்டாபய நாடு திரும்பியதும், அவருக்கு கொழும்பு மலலசேகர மாவத்தையில் வீடு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், அங்கு அதிகமான சத்தம் இருப்பதாக கூறி அவர் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தாம் பதவி வகித்த போது பெற்றுக்கொண்ட அதே அளவு எண்ணிக்கையான பாதுகாப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார்.
இதன்படி, நூறுக்கும் மேற்பட்டவர்கள் அவரின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |