மாலைதீவிற்கு தப்பிச்சென்ற கோட்டாபய: விமானப்படை வெளிப்படுத்திய விசேட தகவல்
அரகலய நாட்களின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிற்கு தப்பிச்செல்வதற்கு இலங்கை விமானப்படையின் விமானமும் நிதியும் பயன்படுத்தப்பட்டமை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
“2022 ஜூலை13ம் திகதி கோட்டாபய இராஜபக்ச இலங்கை விமானப்படை விமானம் மூலமே மாலைதீவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இலங்கை விமானப்படை
அரகலய போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களும் பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை ஜூலை 2022 9ஆம் திகதி ஆக்கிரமித்ததை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கோட்டாபய மாலைதீவிற்கு சென்றுள்ளார்.
இலங்கை விமானப்படையின் விமானத்தை பயன்படுத்தியே அவர் மாலைதீவிற்கு சென்றார்.
திறைசேரி பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட நிதி இதற்கு பயன்படுத்தப்பட்டது.” என கூறப்பட்டுள்ளது.
எனினும் இதற்கான செலவு குறித்து விமானப்படை எந்த தகவலையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இரகசிய தன்மை
ஜனாதிபதியே நாட்டின் தலைவர் முப்படைகளின் தலைவர் என்பதால் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக இலங்கை விமானப்படை விளக்கமளித்துள்ளது.
தற்போதுள்ள ஏற்பாட்டின் படி ஜனாதிபதியின் போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டை நாங்கள் கணக்கிடவில்லை விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் தலைவர் மிக முக்கிய பிரமுகர் என்பதற்குள் அடங்குவதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எனினும் இந்த விவகாரத்தின் இரகசிய தன்மை காரணமாக அனுமதி வழங்கப்பட்டமைக்கான ஆவணத்தை இலங்கை விமானப்படை பகிர்ந்துகொள்ள மறுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |