பலத்த பாதுகாப்புடன் கோடீஸ்வரருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய

Galle Gotabaya Rajapaksa
By Fathima Sep 26, 2023 09:36 AM GMT

காலியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் லலித் வசந்த மெண்டிஸின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகலளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான மோதல்

இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான மோதல் காரணமாக காலியில் வைத்து லலித் வசந்த மெண்டிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்காவின் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்புடன் கோடீஸ்வரருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கோட்டாபய | Gotabaya Attended The Funeral With Heavy Security