மீண்டும் ஊழியா்களை பணிநீக்கம் செய்ய காத்திருக்கும் கூகுள்

Google World Technology
By Madheeha_Naz Jan 13, 2024 08:03 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

ஆண்டுக்கான நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவன செலவீனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 12, 000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான அல்ஃபபெட் நிறுவனம் கடந்தாண்டு குறிப்பிட்டிருந்ததது.

முக்கிய துறைகளை விரிவுபடுத்துவதற்கான முதலீடுகளை கூகுள் மற்றும் அல்ஃபபெட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதால் நிர்வாக கட்டமப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஊழியா்கள் கண்டனம்

இதன் முதற்கட்டமாக, வன்பொருள் மற்றும் பிக்ஸல் கையடக்க தொலைபேசி ஆகிய பிரிவிகளிலிருந்து ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஊழியா்களை பணிநீக்கம் செய்ய காத்திருக்கும் கூகுள் | Google To Lay Off Employees

ஒவ்வொரு காலாண்டிலும் பல பில்லியன்களை வருமானமாக பெரும் ஒரு பெரிய நிறுவனம் ஊழியா்களை இவ்வாறு பனி நீக்குவது கண்டனத்துக்குரியது என அல்ஃபபெட் ஊழியா்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக குறித்த நிறுவன ஊழியா்கள் கடினமாக உழைத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.