பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Parliament of Sri Lanka
Sri Lanka
Sri Lankan Schools
By Mayuri
பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சகத் திணைக்களத்திலிருந்து இவ்வாறு சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணிப்புரைகளை சமர்ப்பிக்கும் அதிகாரம்
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (13.12.2023) கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான பணிப்புரைகளை பாடசாலை அதிபர்கள் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |