இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த இந்திய புலனாய்வு அதிகாரிகள்

Sri Lanka Gold smuggling India
By Sivaa Mayuri Apr 07, 2024 12:11 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

தமிழ்நாடு, ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கடற்கரை, மண்டபம் அருகே நடுக்கடலில் வைத்து 4.9 கிலோ வெளிநாட்டு தங்கத்தை இந்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டதுடன் இந்திய கடலோர காவல்படை மற்றும் ராமநாதபுரம் சுங்க தடுப்பு பிரிவு இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை வழியாக ஒரு குழு, கடற்றொழில் படகு மூலம் தங்கத்தை இந்தியாவிற்கு கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடலோர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

கடலில் வீசப்பட்ட தங்கம்

சந்தேகத்திற்கிடமான கடற்றொழில் படகுகளின் இயக்கம் ஏப்ரல் 3 முதல் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது இந்தநிலையில், ஏப்ரல் 4 ஆம் திகதி அதிகாலையில், அதிகாரிகள் நடுக்கடலில் ஒரு படகைக் கண்டறிந்து, அதை பின்தொடர்ந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த இந்திய புலனாய்வு அதிகாரிகள் | Gold Smugglers Arrested In India

அவர்கள், படகை நெருங்கிச் சென்றபோது, சந்தேகத்திற்குரிய படகில் இருந்த ஒருவரால் ஒரு சரக்கு கடலில் வீசப்பட்டதை அவதானித்தனர்.

இதன்போது, கடலில் வீசப்பட்ட சரக்கு இருக்கும் இடம் பாதுகாக்கப்பட்டு, தேடுதல் பணி தொடங்கியது. ஏப்ரல் 5ஆம் திகதி மதியம் அளவில் வீசப்பட்ட தங்கம் மீட்கப்பட்டது.

மேலும் சந்தேகத்திற்கிடமான நாட்டுப்படகில் மூன்று பேர் இருந்துள்ளதுடன் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலில் வீசப்பட்ட சரக்கு, இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு பூர்வீக தங்கம் என்றும், அது இலங்கையில் இருந்து வந்த படகில் இருந்தவர்களால் தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

 இந்த சரக்குகளில் பல்வேறு அளவுகளில் 4.9 கிலோ எடையுள்ள சுமார் 3.43 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள கடையொன்றில் நடந்த மோசடி

லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள கடையொன்றில் நடந்த மோசடி

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் : அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலை தாக்க தயாராகும் ஈரான் : அமெரிக்காவுக்கு எச்சரிக்கை


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW