இலங்கையின் இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையிலும் இன்றையதினம்(23.12.2025) தங்கவிலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை
அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாயால் அதிகரித்து 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விலை உயர்வு
அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவை அதிகரிப்பதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பாட் கோல்ட் XAU ஒரு அவுன்ஸ் 4,391.92 டொலர் ஆக 1.2 வீதம் உயர்ந்து 4,391.92 டொலர் ஆகவும், ஸ்பாட் சில்வர் XAG 2.7வீதமாக உயர்ந்து 69.23டொலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
1979 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய வருடாந்த இலாபத்தை இது அடையத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலை, கடந்த ஆண்டை விட இன்றுவரை 138வீதமாக உயர்ந்துள்ளது. வலுவான முதலீட்டு வரவுகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கத்தை விட வெள்ளி மிகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.