தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Jun 26, 2025 06:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (26) சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 1,002,544 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 1,004,729 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நட்டஈடு கோரும் ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நட்டஈடு கோரும் ஈரான்!

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,450 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 283,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! | Gold Price Today In Srilanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,500 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,020 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்!

உக்ரைனில் ரஷ்ய விமானப்படையின் உக்கிர தாக்குதல்!

செட்டியார் தெரு தங்க விலை

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி எவ்வித மாற்றங்களும் பாதிவாகாமல், 24 கரட் தங்கப் பவுண் 268,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! | Gold Price Today In Srilanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 248,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நபிவழி மருத்துவம்- கருஞ்சீரகம்

நபிவழி மருத்துவம்- கருஞ்சீரகம்

மனைவியின் முனைவர் பட்ட விழா : சர்ச்சைக்குள் சிக்கிய ரணில்

மனைவியின் முனைவர் பட்ட விழா : சர்ச்சைக்குள் சிக்கிய ரணில்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW