தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Jun 04, 2025 07:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (04) 1000 ரூபாவினால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் 1,012,093 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 1,011,032 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித்

மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித்

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,670 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 285,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,700 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 261,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,220 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 249,700 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு.. ஒருவர் காயம்

மட்டக்களப்பில் துப்பாக்கி சூடு.. ஒருவர் காயம்

செட்டியார் தெரு தங்க விலை

அத்துடன், செட்டியார் தெருவின் தங்க விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் அண்ணளவாக 1000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 265,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 245,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு சீனி ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை

சிவப்பு சீனி ஏற்றுமதி குறித்து பேச்சுவார்த்தை

மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்

மூதூரில் பொலிஸார் முன்னெடுத்த விசேட திட்டம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW