தங்க விலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA May 28, 2025 07:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (28) சடுதியான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 1,002,963 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 993,831 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஹஜ்ஜூக்கு விமானத்தில் செல்லவிருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிசயம்

ஹஜ்ஜூக்கு விமானத்தில் செல்லவிருந்த இளைஞருக்கு காத்திருந்த அதிசயம்

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,060 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 280,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,140 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 257,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,680 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 245,450 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அம்பாறை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

அம்பாறை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

செட்டியார் தெரு தங்க விலை

அத்துடன், செட்டியார் தெருவின் தங்க விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அண்ணளவாக 2000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 263,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள் | Gold Price Today In Sri Lanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 243,300  ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்

நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலம்

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான தகவல்

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான தகவல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW