தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Economic Crisis Today Gold Price Daily Gold Rates Gold
By Madheeha_Naz Jun 06, 2023 08:56 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தங்க நிலவரம்

இதன்படி இன்றைய தினம்(06.06.2023) தங்க அவுன்ஸின் விலை 568,813 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,288 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 146,302 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 134,110 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 16,764 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 16,002 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 128,014 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.    

எனினும் ஆபரணத் தங்கத்தின்  விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW