12 கோடி பெறுமதியான தங்கம் கடத்திய 4 பெண்கள் உளிட்ட 5 பேர் கைது
சுமார் இரண்டு 12 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்திய நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்த தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்களை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்தவர்கள்
தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு விமானங்களில் வந்த குறித்த கும்பல் தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டு வந்த தங்கத்தின் மொத்த சந்தை பெறுமதி பன்னிரண்டு கோடியே 30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் அடிக்கடி இவர்கள் விமானத்தில் பயணம் செய்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்பவர்கள் எனவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.