கிண்ணியாவில் மரத்தில் இருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு

Sri Lanka Police Trincomalee Eastern Province
By Laksi Nov 30, 2024 01:55 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை (Trincomalee) - கிண்ணியாவில் மரத்திலிருந்து விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது இன்று (30) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த, வான்எல புகாரி நகர் வித்யாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்றுவரும் 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு உதவும் புதிய வாகனம் அறிமுகம்

மேலதிக விசாரணை

குறித்த சிறுமி, தனது வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறித்துக் கொண்டு இருந்த போது, தவறி விழுந்து தலையில் காயம்பட்ட நிலையில் உயிரிழந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

கிண்ணியாவில் மரத்தில் இருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு | Girl Dies After Falling From Tree In Trinco

சிறுமியின் சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW