மூன்றரை வயது சிறுமி பரிதாப மரணம்

Sri Lanka Police Sri Lanka Accident
By Chandramathi Apr 16, 2024 07:21 AM GMT

பொலன்னறுவை - அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிருணி ரஷ்மிகா தேவி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

வீட்டு முற்றத்தில் தனது மூத்த சகோதரியுடன் விளையாடிய பின்னர், இந்த சிறுமி நீராடுவதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

மூன்றரை வயது சிறுமி பரிதாப மரணம் | Girl Died After A Water Tank Fell On Her Head

இதன்போது குளியலறையின் மேற்கூரையில் இருந்த நீர்த் தாங்கி தலையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.