பெண் குழந்தையின் சிறப்புகள்
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியுடனும், பெண் குழந்தை பிறந்தால் மன வெறுப்போடும் நடந்து கொள்கிறார்கள்.
குழந்தைகள் அல்லாஹ்வின் நிஃமத் என்பதை நினைவில் கொண்டு ஆண் மற்றும் பெண் என எந்த குழந்தையாய் இருப்பினும் அதை வரவேற்று அது ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்களின் சமுதாயத்தை வளர்க்கிறது என எண்ணி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.
ரசூலுல்லாஹ்(ஸல்) நவின்றுள்ளார்கள், ஒரு பெண் குழந்தை பிறக்கும்பொழுது அல்லாஹ் அந்த வீட்டிற்கு மலக்குமார்களை அனுப்புகிறான்.
அவர்களை அவ்வீட்டார்களின் சமாதானத்திற்கு பிரார்த்தனை செய்து அக்குழந்தைகளை தம் இறக்கைகளின் நிழலால் அரவணைத்து தம் கரங்களால் அக்குழந்தையின் தலையை உயர்த்தி இது பலவீனமான மென்மையான நபர் என்கின்றனர்.
யார் ஒருவர் தமது இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவமடையும் வரை அவர்களின் தேவையை நிறைவேற்றி கவனித்து கொள்கிறாரோ அவரும் நானும் கியாமத் நாளில் இவ்வளவு நெருக்கமாக இருப்போம் என தனது இரு விரல்களையும் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் சேர்த்துக் காண்பித்தார்கள்.
யார் ஒருவர் தனது பெண் மக்களை சிரத்தையுடன் கவனித்து அவர்களை சிறப்பான முறையில் கவனித்து வருகிறாரோ அவருக்கு நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். (நபிமொழி)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |