இலங்கை முஸ்லிம்களுக்கு இந்தியாவின் ரமழான் அன்பளிப்பு
யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் எற்பாட்டில் இஸ்லாமிய ரமழான் பெருநாளினை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் ரம்ஸான் அன்பளிப்பு பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று(27) யாழ். வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்.இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்துள்ளார்.
ரமழான் அன்பளிப்பு
இதில் யாழ். வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 82 முஸ்லிம் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 7500 பெறுமதியான உலர் உணவு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் இந்திய துணை தூதுவர் உள்ளிட்ட பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் முஸ்லிம் மதத்தலைவர்கள் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |