பறகஹதெனியா அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் வாசிகசாலைக்கான புத்தக அன்பளிப்பு மற்றும் மரநடுகை நிகழ்வு

Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Sep 19, 2024 10:04 AM GMT
Laksi

Laksi

ஸலபிய்யா கலாபீடத்தின் 2014ஆம் ஆண்டு பட்டம்பெற்று வெளியாகிய பழைய மாணவர்களால் கல்லூரி வாசிகசாலைக்கு ஒரு தொகுதி புத்தக அன்பளிப்பு மற்றும் மரநடுகை செயற்பாடும் இன்று (19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது லுஹர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதுடன் வாசிப்பின் அவசியம் மற்றும் மாணவர்களின் ஆளுமையாக்கத்தில் அதன் செல்வாக்கு குறித்த பல்வேறு அம்சங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு இந்த நாட்டிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பங்களிக்கும் வகையில் கலாபீடத்திற்கான ஆய்வு மையம் நிறுவப்படுவதன் தேவை குறித்து பேசப்பட்டதுடன் அதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

புத்தக்கங்கள் அன்பளிப்பு

இதனை தொடர்ந்து கலாபீட வாசிகசாலைக்கு முந்நூறுக்கும் மேற்பட்ட புத்தக்கங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

பறகஹதெனியா அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் வாசிகசாலைக்கான புத்தக அன்பளிப்பு மற்றும் மரநடுகை நிகழ்வு | Gift Of Books College Reading Room By Old Student

கலாபீட வாசிகசாலைக்கு தேவையான புத்தகங்களை பெற்றுக்கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான ஆதரவு கலாபீடத்திற்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் எனும் கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மர நடுகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ஏ.எல்.கலீலுர் ரஹ்மான், உப அதிபர் எஸ்.யு ஸமீன், கலாபீட விரிவுரையாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கலாபீட மாணவர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery