பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நிறைவு

Election Commission of Sri Lanka Sri Lanka General Election 2024
By Laksi Oct 11, 2024 10:21 AM GMT

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (11) பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்புமனுக்களுக்கான எதிர்ப்பு பிரேரணைகள் முன்வைக்கும் நேரம் முடிந்ததும், தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இன்று பிரகடனம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பாதுகாப்பு

அத்தோடு, சின்னங்கள் தொடர்பான அறிவிப்பும் இன்று இடம்பெறும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நிறைவு | General Election Nomination Completed

இந்நிலையில், 22 தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், தெரிவத்தாட்சி அலுவலகங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் - காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் - காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காதர் மஸ்தான்

வன்னியில் வேட்புமனுத் தாக்கல் செய்த காதர் மஸ்தான்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW